நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர்.ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர்.ஸ்டாலின்
நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர்.ஸ்டாலின்
Published on

நீட் நுழைவுத்தேர்வுக்கு நிரந்தர விலக்குக்கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் மு.க.ஸடாலின்.

இது தொடர்பாக  சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ நீட் நுழைவுத்தேர்வுக்கு நிரந்தர விலக்குக்கோரும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றி  குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் 7.5% இடஒதுக்கீடு பெறும் வகையில் சட்டமசோதா இருக்கும். நீட் தேர்வினை திமுக தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம். அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தரவேண்டும். மருத்துவ படிப்பிற்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம்.

சிஏஏ சட்டம் வந்தபோதே நீட் தேர்வுக்கு விலக்கு கொடுத்தால் அந்த சட்டத்தை ஆதரிக்கிறோம் என  அதிமுக கூறியிருக்கலாம். ஆனால் அதை செய்ய அதிமுகவுக்கு சக்தி இல்லை” எனத் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com