10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
Published on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தகவல் மையங்களிலும் அனைத்து நூலகங்களிலும் மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகளிலும் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com