திண்டுக்கல்: ஆன்லைனில் ஆடிப்பாடி பாடம் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்..!

திண்டுக்கல்: ஆன்லைனில் ஆடிப்பாடி பாடம் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்..!
திண்டுக்கல்: ஆன்லைனில் ஆடிப்பாடி பாடம் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்..!
Published on

கொடைரோடு அருகே தனியார் பள்ளிகளுக்கு இணையாக வாட்ஸ்அப் மூலம் ஆடிப்பாடி நடனமாடி கல்வி புகட்டும் ஆசிரியர்களின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக 100 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், அப்பள்ளி சிறந்தப் பள்ளிக்கான விருதைப் பெற்றது. இப்பள்ளியில் ஆங்கிலக்கல்வியும் தொடங்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், தனியார் பகுதிகளில் இருந்து விலகி இப்பள்ளியில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.


இந்நிலையில் ஊரடங்கிலும் மாணவர்களுக்கான கல்வியை முறையாக கொண்டு செல்ல நினைத்த, பள்ளி தலைமை ஆசிரியரான ஆர்தர் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை ஏற்பாடு செய்தார். ஆனால் வறுமை கோட்டில் கீழ் உள்ள மாணவர்களுக்கு இம்முறையிலான கல்வி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் அண்டை வீட்டாரின் செல்போன் எண்களை சேகரித்த ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கு தனித்தனியான வாட்ஸ் ஆப் குழுக்களை அமைத்தனர்.

நேரடியாக ஆன்லைன் மூலம் பாடம் எடுக்க முடியாததால், ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் ஆடிப்பாடி நடனமாடி பாடங்களை நடத்தி அதை வீடியோவாகப் பதிவு செய்து மாணவர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த வீடியோக்களுக்கான சந்தேகங்கள் அடுத்த நாள் வெளியிடப்படும் வீடியோவில் கலந்துரையாடப்படுகிறது. ஆசிரியர்களின் இந்த முயற்சி அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com