+2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இந்த தேதிகளில் பெறலாம்.. கடும் கட்டுப்பாடுகள்..!

+2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இந்த தேதிகளில் பெறலாம்.. கடும் கட்டுப்பாடுகள்..!

+2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இந்த தேதிகளில் பெறலாம்.. கடும் கட்டுப்பாடுகள்..!
Published on

12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஜூலை 24 முதல் 30-ஆம் தேதிவரை மதிப்பெண் சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 20 மாணவர்கள் மட்டுமே வரவழைக்கப்பட வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், பயணம் செய்ததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், கட்டுப்பாட்டு காலம் முடிந்த பின்னர் சான்றிதழ்களை பெறலாம்.

தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் வரிசையில் நிற்பதற்கேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சான்றிதழ் வாங்க வரும் மாணவர்கள் / பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

பள்ளி வளாகத்திற்குள் ஒன்று கூடுதலை தவிர்க்க வேண்டும். பள்ளி வளாகத்தை விட்டு மாணவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.

மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் ஆசிரியர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

இரண்டு அறைகளை மாணவர்கள்/ பெற்றோர்களுக்கு காத்திருப்பு அறைகளாக சமூக இடைவெளியோடு ஒதுக்க வேண்டும். இருப்பினும் காத்திருக்க வைக்காமல் இருப்பது நல்லது.

இதேபோல், மாணவர்கள் மறுக்கூட்டல், மறு மதிப்பீடு செய்ய பள்ளிக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதற்கென தனி அறைகளை பள்ளிகள் ஒதுக்கிட வேண்டும்.

ஜூலை 24க்கு முன்பாக பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினியால் சுத்தப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். தினமும் சான்றிதழ் பணிகளை தொடங்கும் முன்பு கதவுகள், ஜன்னல்கள், மேஜைகளை சுத்தப்படுத்த வேண்டும்.

கைகளை சுத்தம் செய்ய சோப், தண்ணீர், கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். கைகளை சுத்தப்படுத்திய பிறகே உள்ளே அனைவரையும் அனுமதிக்க வேண்டும்.

கழிவறைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.

அனவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளிலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com