உலகளாவிய டெண்டர் கோரி ஒப்பந்தங்களை இறுதி செய்ய வேண்டும் என்ற அரசாணையில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த அச்சகங்களுக்கு மட்டும் ஒப்பந்தங்கள் வழங்க இயலும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்திருக்கிறது.
தமிழகம் முழுவதுமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்கான புத்தகங்கள் ஆந்திராவில் டெண்டர் விடுவதாக செய்தி வெளியானது, இதற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், “பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள 8 கோடி புத்தகங்களுக்கான ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு இல்லை. அரசின் உத்தரவுப்படி உலகளாவிய டெண்டர் கோரப்பட்டே ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. உலகளாவிய டெண்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அச்சகங்களுடன், பிற மாநிலத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அதன்படியே ஆந்திரா, கர்நாடகா அச்சகங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது
உலகளாவிய டெண்டர் கோரி ஒப்பந்தங்களை இறுதி செய்ய வேண்டும் என்ற அரசாணையில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த அச்சகங்களுக்கு மட்டும் ஒப்பந்தங்கள் வழங்க இயலும். எனவே, அரசாணையில் திருத்தம் வேண்டி அரசுக்கு பாடநூல் கழக தலைவர் லியோனி கடிதம் எழுதி உள்ளார். கடிதத்துக்கு பதில் கிடைத்த உடன், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது