நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக இளநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் கொண்ட மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
படிப்புகள்
மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல், உயிர்தொழில்நுட்பவியல், உணவு தொழில்நுட்பவியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) ஆகிய நான்காண்டு கால இளநிலை பட்டப்படிப்புகள் கற்பிக்கப்டுகின்றன.
மேலும், தொழில்சார் மீன்பதன நுட்பவியல், தொழில்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் இளநிலை நீர்வாழ் உயிரின மேலாண்மை ஆகிய பாடப்பிரிவுகளில் மூன்று ஆண்டுகால இளநிலைப் படிப்புகள் தொழிற்கல்வியாக வழங்கப்படுகின்றன.
இடங்கள்
நடப்பு கல்வியாண்டில் தமிழக மாணவர்களுக்கு 347 இடங்களும், வெளிமாநிலத்தவர்களுக்கு 26 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 14 இடங்களும் வெளிநாட்டவருக்கு 5 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவின் கீழ் பி.எம்.எஸ்.சி பட்டப்படிப்பில் 6 இடங்களும் பிடெக் மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்பில் 2 இடங்களும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி
பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடங்களைப் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீடு அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ப தகுதி மதிப்பெண் சதவிகிதங்கள் வேறுபடும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக இணையதளம் வழியாக கட்டணத்தைச் செலுத்தலாம் அஞ்சல் வழியில் விண்ணப்பங்களை அனுப்பக்கூடாது.
(வொகேஷனல் படிப்புகளுக்கு) விண்ணப்பக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ. 500. பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ரூ. 250. மற்ற படிப்புகளுக்கு விண்ணப்பக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ. 800. பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ரூ. 400.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 26.10.2020
தரவரிசைப் பட்டியல் வெளியாகும் நாள்: 29.10.2020
விவரங்களுக்கு: www.tnjfu.ac.in