காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ்த் தகுதித் தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
காவலர், உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான விதிகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பின்படி, தமிழ் தகுதி தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு கணக்கில் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு காவலர் தேர்வில் இனிமேல் 2 தேர்வுகள் இருக்குமென்றும், அதில் தேர்வு 1-ல், தமிழ் பாடத்தில் 80 வினாக்கள் (தகுதி தேர்வு - குறைந்த பட்சம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்) கேட்கப்படும்; தொடர்ந்து தேர்வு 2-ல் வழக்கம்போல் நடைபெறும் தேர்வு (GK- 50 வினாக்கள், 30- உளவியல் வினாக்கள்) கேட்க்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.