சிண்டிகேட் வங்கியில் வேலை!

சிண்டிகேட் வங்கியில் வேலை!

சிண்டிகேட் வங்கியில் வேலை!
Published on

சிண்டிகேட் வங்கியில், ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் என்ற பணிப்பிரிவுகளின் கீழ் 129 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணிகள்:
1. சீனியர் மேனேஜர் (Risk Management)
2. மேனேஜர் (Risk Management)
3. மேனேஜர் (Law)
4. மேனேஜர் (Audit)
5. செக்யூரிட்டி ஆபிசர் 

காலிப்பணியிடங்கள்:
1. சீனியர் மேனேஜர் (Risk Management) - 5
2. மேனேஜர் (Risk Management) - 50
3. மேனேஜர் (Law) - 41
4. மேனேஜர் (Audit) - 3
5. செக்யூரிட்டி ஆபிசர் - 30

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.04.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 18.04.2019

ஊதியம்:
1. சீனியர் மேனேஜர் (RM) என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.31,705 முதல் அதிகபட்சமாக ரூ.45,950 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
2. மற்ற நான்கு பணிகளுக்கும், குறைந்தபட்சமாக ரூ.42,020 முதல் அதிகபட்சமாக ரூ.51,490 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். 

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 25 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது வரை இருத்தல் அவசியம். 
செக்யூரிட்டி அதிகாரி என்ற பணிக்கு மட்டும் அதிகபட்ச வயது 45 ஆக இருந்தால் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வுக்கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளி - ரூ.100 + ஜி.எஸ்.டி
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.600 + ஜி.எஸ்.டிகுறிப்பு:

1. தேர்வுக்கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.
2. செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் மீண்டும் திரும்பப் பெற இயலாது.

கல்வித்தகுதி:

1. சீனியர் மேனேஜர் (Risk Management) என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் கணிதம் அல்லது கலைத்துறை சார்ந்த புள்ளியியல் படிப்புடன், எம்.பி.ஏ (பேங்கிங் / பைனான்ஸ்) பட்டப்படிப்பையோ அல்லது முதுகலை பட்டப்படிப்பில் கணிதம் அல்லது கலைத்துறை சார்ந்த புள்ளியியல் படிப்பில் 60% தேர்ச்சியோ பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சமாக 3 வருட வங்கித்துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

2. மேனேஜர் (Risk Management) என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் கணிதம் அல்லது கலைத்துறை சார்ந்த புள்ளியியல் படிப்புடன், எம்.பி.ஏ (பேங்கிங் / பைனான்ஸ்) பட்டப்படிப்பையோ அல்லது முதுகலை பட்டப்படிப்பில் கணிதம் அல்லது கலைத்துறை சார்ந்த புள்ளியியல் படிப்பில் 60% தேர்ச்சியோ பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சமாக 1 வருட வங்கித்துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

3. மேனேஜர் (Law) என்ற பணிக்கு, இளங்கலை சட்டப்படிப்பை பயின்று, குறைந்தபட்சமாக 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

4. மேனேஜர் (Audit) என்ற பணிக்கு, ஏதேனும் ஒரு இளங்கலையில் பட்டம் பெற்று, கூடுதலாக CISA / OSCP / CEH போன்ற சான்றிதழ் படிப்பையும் அத்துடன் குறைந்தபட்சம் 4 வருட துறை சார்ந்த பணி அனுபவம் அவசியம்.

5. செக்யூரிட்டி ஆபிசர் என்ற பணிக்கு, இந்திய ராணுவத்தில் குறைந்த பட்சமாக 5 வருடம் அதிகாரி பணியிலோ அல்லது 5 வருடம் போலீஸ் அதிகாரியாகவோ பணியாற்றியவர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://ibpsonline.ibps.in/synvpbkmar19/ - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு நடைபெறும் முறை:
4 பிரிவுகளின் கீழ் 200 கேள்விகள், 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டு 2 மணி நேரம் 30 நிமிடங்களில் இந்த தேர்வு முடிவடையும்.

மேலும், இது குறித்த முழுமையான தகவல்களுக்கு
https://www.syndicatebank.in/RecruitmentFiles/LATERAL_RECT_2019_DETAIL_ADVT_HO_HRDD_27032019.pdf - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com