+2 மதிப்பெண்களை ஜூலை 31க்குள் வெளியிடவேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

+2 மதிப்பெண்களை ஜூலை 31க்குள் வெளியிடவேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
+2 மதிப்பெண்களை ஜூலை 31க்குள் வெளியிடவேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
Published on

+2 தேர்வு ரத்து செய்யப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் ஜூலை 31ஆம் தேதிக்குள் மதிப்பெண்களை வெளியிட உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொரோனா தாக்கம் காரணமாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர பிரதேசம் தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களுமே +2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து இன்று விசாரணை நடைபெற்றது.

இதுகுறித்து நீதிபதி அமர்வு, மாநிலங்கள் மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து அடுத்த 10 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும் எனவும், அதன்பிறகு தேர்வு முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிடவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

முன்னதாக, ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ +2 தேர்வு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை கவனித்தபிறகே மாநில அளவிலான +2 பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிட முடியும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, சிபிஎஸ்இ +2 மதிப்பெண்ணானது மாணவர்கள் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் எடுத்திருக்கும் மதிப்பெண்களின் விகிதத்தைக்கொண்டே வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com