பல்கலைக்கழகங்கள் விரும்பினால் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளை நடத்த அனுமதியளிக்க கூடாது என்று கூறி மாணவர் அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்தபோது, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு உட்பட்டு முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
அத்துடன் மாணவர் அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். முன்னதாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் விருப்பப்பட்டால் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.