டிஜிட்டல் மார்கெட்டிங்கில் வேலைவாய்ப்பு எப்படி..? சொல்லி அடிக்கும் பாகம் 9

டிஜிட்டல் மார்கெட்டிங்கில் வேலைவாய்ப்பு எப்படி..? சொல்லி அடிக்கும் பாகம் 9
டிஜிட்டல் மார்கெட்டிங்கில் வேலைவாய்ப்பு எப்படி..? சொல்லி அடிக்கும் பாகம் 9
Published on

டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கு? என்பதை இந்த வார கட்டுரையில் சொல்லி அடிப்போம்.

மொபைல் போன் இல்லாமல் தூங்குவதும் இல்லை... எழுவதும் இல்லை... என்கிற காலத்தில் நாம் இருந்து வரும் நிலையில் டிஜிட்டல் மார்கெட்டிங் துறையை நோக்கி நாம் தள்ளப்பட்டு வருகிறோம் என்பதை உணர்ந்து வேலைவாய்ப்புகளை அதிகரித்து கொள்ளும் காலம் வந்துவிட்டது. 

அதைப் படித்தேன் வேலையில்லை, இதைப் படித்தேன் வேலையில்லை என்று சொல்வதற்கு பதில் வேலைவாய்ப்புகள் இருக்கும் இடத்திற்கு நாம் சென்றுகொண்டே இருக்க வேண்டும். ஃபேஸ்புக் பயன்படுத்தும் போது “Sponsored Post” என்றும், கூகுள் தேடலில் “ADS” என்றும், பல இடங்களில் பார்த்திருப்போம். ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றார் போல் விளம்பரங்களை டிஜிட்டல் மூலம் தருவது தான் டிஜிட்டல் மார்கெட்டிங். குறைந்த கட்டணத்தில் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய உதவும். 

டிஜிட்டல் மார்கெட்டிங் படிப்பை யார் படிக்கலாம் ?

டிஜிட்டல் மார்கெட்டிங் படிப்பை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். கணினி மற்றும் மொபைலை பயன்படுத்த தெரிந்தால் போதுமானது. வேலை தேடிவரும் இளைஞர்களுக்கு மாற்று துறையாகவும் இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சம்பளம் எப்படி இருக்கும் ?

குறைந்தபட்ச சம்பளமாக ரூ.10000/- லிருந்து அதிகபட்ச சம்பளமாக ரூ.35000/- வரை எதிர்பார்க்கலாம். 

மேலும் டிஜிட்டல் மார்கெட்டிங் பற்றிய தகவல்கள் அறிய: http://boomacademy.org/benefits-of-digital-marketing/ 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com