கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு அக்டோபர் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், ஆண்டுதோறும் கல்வி ஆண்டு தொடங்கியதில் இருந்து 6 மாதங்கள் வரை தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட இடங்கள் நிரப்பப்படுகின்றன. மூன்று கட்டங்களாக மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், கடந்த இரண்டு கட்டங்களில் 82,909 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தால், விண்ணப்பத்தை தலைமைக் கல்வி அதிகாரி பரிசீலித்து, விண்ணப்பதாரரின் முகவரிக்கு அருகில் உள்ள பள்ளிக்கு பரிந்துரை செய்யப்படும்.
மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கை செப்டம்பர் 11 முதல் 25 வரை நடைபெற வேண்டிய நிலையில், அதற்காக விண்ணப்பிக்க காலக்கெடு அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கையில் 41,832 இடங்கள் காலியாக உள்ள நிலையில், இதுவரை 10 ஆயிரம் விண்ணப்பங்களே வந்திருப்பதாக வந்திருப்பதாக கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, மேலும் பலர் விண்ணப்பிக்க வசதியாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.