மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களில், கிளர்க் / அசிஸ்டெண்ட், போஸ்டல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான Combined Higher Secondary Level (CHSL-2019) தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. உதவியாளர் - Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
2. போஸ்டல் அசிஸ்டெண்ட் - Postal Assistant (PA) / Sorting Assistant (SA)
3. டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் - Data Entry Operator (DEO)
4. டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (கிரேடு - A) - Data Entry Operator, Grade ‘A’
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 03.12.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2020
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.01.2020
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 12.01.2020
வங்கி ரசீது (Challan) மூலமாக தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 14.01.2020
(Tier-I) கணினி வழித்தேர்வு நடைபெறும் நாள்: 16.03.2020 முதல் 27.03.2020 வரை
(Tier-II) எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 28.06.2020
ஊதியம்:
1. LDC/ JSA - ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
2. PA / SA - ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை
3. DEO - ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை
4. DEO, கிரேடு (‘A’)- ரூ.25,500 முதல் 81,100 வரை
தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
2. மற்ற அனைத்து பிரிவினர்களுக்குமான தேர்வுக்கட்டணம் - ரூ.100
வயது வரம்பு: (01-01-2020 அன்றுக்குள்)
குறைந்தபட்சமாக, 18 வயது முதல் அதிகபட்சமாக 27 வயது வரை இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
1. வயது தளர்வும் உண்டு.
2. பணிகளுக்கேற்ப வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.
கல்வித்தகுதி:
1. LDC/ JSA, PA/ SA, DEO (DEOs in C&AG தவிர) என்ற பணிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிளஸ்டூ வகுப்பில் தேர்ச்சி அவசியம்.
2. DEO Grade ‘A’ என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிளஸ்டூ வகுப்பில் (Science stream with Mathematics) தேர்ச்சி அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில், https://ssc.nic.in/ (அல்லது) http://www.sscsr.gov.in/ - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_03122019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.