மாநில அரசு சார்பில் நுழைவுத் தேர்வு - ஏ.கே.ராஜன் அறிக்கையின் அம்சங்கள் என்ன?

மாநில அரசு சார்பில் நுழைவுத் தேர்வு - ஏ.கே.ராஜன் அறிக்கையின் அம்சங்கள் என்ன?
மாநில அரசு சார்பில் நுழைவுத் தேர்வு - ஏ.கே.ராஜன் அறிக்கையின் அம்சங்கள் என்ன?
Published on

மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தியாக வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறினால் மாநில அரசு தேர்வு நடத்த பரிந்துரை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 10ஆம் தேதி நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அரசு குழு அமைத்தது. பல்வேறு தரப்பினரும் தங்களின் கருத்துகளை இந்த குழுவிற்கு அனுப்பி வைத்தனர். இதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட அறிக்கையை, தங்களது பரிந்துரைகளுடன் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீதியரசர் ஏ.கே. ராஜன் 165 பக்க அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கி இருப்பதாக கூறினார். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் 85 ஆயிரத்துக்கும் அதிகமான கருத்துகள் வந்திருப்பதாக கூறிய நீதியரசர் ஏ.கே.ராஜன் அவற்றில் பெரும்பாலானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

ஏ.கே.ராஜன் அறிக்கையின் அம்சங்கள் என்ன?

அந்த அறிக்கையில், மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தியாக வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறினால் மாநில அரசு தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், மாநில அரசின் நுழைவுத் தேர்வு, ப்ள்ஸ் 2 மதிப்பெண் இரண்டையும் கணக்கிட்டு மருத்துவ சேர்க்கை நடத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பரிந்துரையை சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றால் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும், நீட் தேர்வு இல்லாத காலங்களில் நடந்த மாணவர் சேர்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறைவாகவே இருந்துள்ளது எனவும், நீட் தேர்வு இல்லை என்றாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் தனி உள்ஒதுக்கீடு தேவை எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், பெறப்பட்ட 86,462 மனுக்களில் 85,000க்கும் மேல் நீட் தேர்வு வேண்டாம் என்று தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com