தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கலாம் என தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் கூறினார்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் வகையிலான சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்னும் கிடைக்காத நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.