பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வருகை தந்தனர்.
முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என பஞ்சாப் அரசு அறிவுறுத்தியுள்ளது. எனினும் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராமல் பள்ளிகளை திறப்பது நியாயமல்ல என சில பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.