சூப்பர் ஸ்பெசாலிட்டியில் 50% இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி.. யாருக்கு தெரியுமா?

சூப்பர் ஸ்பெசாலிட்டியில் 50% இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி.. யாருக்கு தெரியுமா?
சூப்பர் ஸ்பெசாலிட்டியில் 50% இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி.. யாருக்கு தெரியுமா?
Published on

சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடஒதுக்கீட்டை இன்சர்வீஸ் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தனியார் மருத்துவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இரண்டு தினங்களுக்கு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் அது ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது நடந்த வழக்கு விசாரணையின்போது, `தமிழக அரசின் அரசாணை புதிதல்ல. சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் இன்சர்வீஸ் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்குவது என்பது தனி இடஒதுக்கீடு அல்ல. இது ஒருவகையான மாணவர் சேர்க்கை தான். இது சேவைமனப்பான்மையுடன் பணி செய்யும் அரசு மருத்துவர்களுக்கான முன்னுரிமையேதான் தவிர வேறெதுவும் இல்ல. மேலும் இது தமிழக அரசின் கொள்கை முடிவு ஆகும். எனவே இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் மேலும் இது சாதிவாரியான ஒதுக்கீடு இல்லை. மாறாக இது அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீடு. மேலும் இது அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான ஒரு நுழைவு கருவி மட்டுமே. மேலும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த ஒதுக்கீடு சரியானதே” என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

அதற்கு மத்திய அரசு தரப்பில், “சூப்பர் ஸ்பெசாலிட்டி மருழ்துவ மேற்படிப்பில் 2017ல் இருந்து இட ஒதுக்கீடு வழங்கவில்லை.
எனவே அதையே தொடர வேண்டும். இந்த ஆண்டும் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு கூடாது” என சொல்லப்பட்டது. மத்திய அரசு தரப்பிலும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தனியார் மருத்துவர்கள் தரப்பில் “அரசு மருத்துவர்களுக்கு இவ்வாறு தனி இடஒதுக்கீடு வழங்குவது பாகுபடுத்தி பார்ப்பது என்றும், இவ்வாறு உள்ஒதுக்கீடு செய்ய முடியாது எனவும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது எனவே தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்பில் 50% ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியது. மேலும் இந்த ஆண்டு தமிழக அரசின் அரசாணை படி அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெசாலிட்டி மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்கி கலந்தாய்வு நடத்தவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதேவேளையில் மருத்துவ மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த பிரதான வழக்கை, விடுமுறைக்கு பின்னர் விசாரிப்பதாகவும் தெரிவித்த உச்சநீதிமன்றம், அந்த விசாரணையை ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com