எஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் பணி - விண்ணப்பிக்கத் தயாரா?

எஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் பணி - விண்ணப்பிக்கத் தயாரா?
எஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் பணி - விண்ணப்பிக்கத் தயாரா?
Published on

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில், கிளரிக்கல் எனப்படும் ஜூனியர் அசோசியேட்ஸ்-2020 என்ற பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு 

வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி:
ஜூனியர் அசோசியேட்ஸ் (Customer Support & Sales)

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் = 8,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய தேதி: 03.01.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.01.2020
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 26.01.2020

ஆன்லைனில் முதல்நிலை தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 11.02.2020 முதல்
ஆன்லைனில் முதன்மை தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: ஏப்ரல்-2020 - 2-வது வாரம்

வயதுவரம்பு: (01.01.2020 அன்றுக்குள்)
1. குறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரையும் பெற்றிருத்தல் வேண்டும்.
2. விண்ணப்பதாரர்கள் 01.01.2000-க்கு முன்னும் 02.01.1992-க்கு பின்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:
தொடக்க ஊதியமாக ரூ.13,075 முதல் அதிகபட்சமாக ரூ.31,450 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது
2. பொது / EWS / OBC பிரிவினர் - ரூ.750

குறிப்பு:
செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற இயலாது.
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.

கல்வித்தகுதி: (01.01.2020 - அன்றுக்குள்)
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி அவசியம். 

குறிப்பு:
கடைசி வருடம் பயில்வோரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு நடைபெறும் முறை:
1. முதல்நிலை தேர்வு
2. முதன்மை தேர்வு

முதல் நிலை தேர்வானது, அப்ஜெக்டிவ் முறையில் மூன்று பிரிவுகளின் கீழ் 100 கேள்விகள், 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில் முடிவடையும்.
முதன்மை தேர்வானது, அப்ஜெக்டிவ் முறையில் நான்கு பிரிவுகளின் கீழ் 190 கேள்விகள், 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டு, 2 மணி நேரம் 40 நிமிடத்தில்
முடிவடையும்.

குறிப்பு:
தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://ibpsonline.ibps.in/sbijassdec19/ (அல்லது) https://www.sbi.co.in/careers/ongoing-recruitment.html - என்ற இணையதள
முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, https://sbi.co.in/documents/77530/400725/JA+20+-+Detailed+Ad+%28Eng%29++- +Final.pdf/7aeafcee-b7fd-b22d-8993-4eea4c969f7c?t=1577966465395 - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com