“நுழைவு தேர்வை ரத்து செய்தால்தான் கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில முடியும்” - சகாயம் ஐஏஎஸ்

“நுழைவு தேர்வை ரத்து செய்தால்தான் கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில முடியும்” - சகாயம் ஐஏஎஸ்
“நுழைவு தேர்வை ரத்து செய்தால்தான் கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில முடியும்” - சகாயம் ஐஏஎஸ்
Published on

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வை ரத்து செய்தால் மட்டுமே கிராமப்புற மாணவர்கள் உயர்க்கல்வி பயில முடியும் என மதுரையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பேசியுள்ளார்.

மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் வட மாநில இளைஞர்கள் போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தது வருந்தத்தக்க ஒன்று. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசு தரப்பில் மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஏனெனில் நுழைவு தேர்வை ரத்து செய்தால் மட்டுமே கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில முடியும். தமிழகத்தில் 90 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகுக்கப்பட வேண்டும்.

நான் அரசியல் கட்சி ஏதும் தொடங்கவில்லை. 7 ஆண்டுகாலம் எந்தவொரு அதிகாரமும் இல்லாத பணியில் இருந்தேன். அதன் அடிப்படையிலேயே நான் ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து விலகினேன். ஐ.ஏ.எஸ் பணியில் இருந்து விலகிய போது முன்னணி கட்சியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என் கொள்கை பிடித்த இளைஞர்கள் தேர்தலில் நின்றார்கள். அவர்களுக்காக பிரச்சாரம் செய்தேன். ஊழல் செய்ய வேண்டும், லஞ்சம் கொடுக்க வேண்டும் என்கிற நிலை தான் தற்போது உள்ளது. தமிழ் மண்ணுக்காக, ஈழத் தமிழர்களுக்காக, சாதிக்கு எதிராக என அனைவருக்குமாக தமிழக அரசு செயல்படும் என நம்புகிறேன்.

இப்போதைய இளைஞர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இளைஞர்கள் இன்னும் விழிப்புணர்வு அடைய வேண்டும். இயற்கை வளங்களை சூரையாடுவது, ஊழல் ஆகியவைகளில் இளைஞர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். போலவே மாணவர்கள் ஒழுக்கதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் ஒழுக்கம் தவறி செல்வதில் சமூகத்திற்கும் பங்குண்டு. மாணவர்கள், இளைஞர்கள் போதை வழிக்கு செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும், பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேசி தீர்வு காண வேண்டும்" என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com