'ஆரோக்ய சேது' ஆப் அவசியம்... கல்லூரிகளுக்கு தமிழக அரசின் நெறிமுறைகள் அறிவிப்பு!

'ஆரோக்ய சேது' ஆப் அவசியம்... கல்லூரிகளுக்கு தமிழக அரசின் நெறிமுறைகள் அறிவிப்பு!
'ஆரோக்ய சேது' ஆப் அவசியம்... கல்லூரிகளுக்கு தமிழக அரசின் நெறிமுறைகள் அறிவிப்பு!
Published on

வருகிற 7ஆம் தேதி முதல் உயர் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 2ஆம் தேதிமுதல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வருகிற 7ஆம் தேதிமுதல் உயர் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தற்போது கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் இறுதியாண்டு மாணவர்களுக்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. பாலிடெக்னிக், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

  • வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும்
  • தொற்று அறிகுறிகள் இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. உடனே தனிமைப்படுத்தப்படுவர்
  • ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி உண்டு
  • நீச்சல் குளங்கள் மூடப்பட வேண்டும்
  • மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல அனுமதி இல்லை
  • கல்லூரியில் மாணவர் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதி
  • முடிந்தவரை மாணவர்கள் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள உறவினர்கள் வீட்டில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
  • ஒரு நிறுவனத்தின் முதல்வர் அல்லது பிரின்சிபல் நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை கண்காணித்து உறுதிசெய்யவேண்டும்
  • ஆசிரியர்கள், பேராசியர்கள் ‘ஆரோக்ய சேது’ செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும்
  • 50% மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதி என்பன உள்ளிட்ட 15 பக்கங்கள் அடங்கிய பல்வேறு நெறிமுறைகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கென்று தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com