கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே அரசுப் பணி சார்ந்த வேலைவாய்ப்புகான அறிவிப்புகள் எதுவுமே வெளியாகாமல் இருந்த நிலையில், இப்போது நாடு முழுவதும் கொரோனா தாக்கம் குறைவதை தொடர்ந்து அரசுப் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில வந்த சில முக்கியமான அரசுப் பணிக்கான தேர்வு அறிவிப்புகளை, இந்த சிறப்பு தொகுப்பில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
1) மத்திய அரசுப் பணிக்காக காத்திருப்போருக்கு எம்டிஎஸ் மற்றும் ஹவில்தார் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,600 காலி பணியிடங்கள் இருக்கும் இந்த பணியில், Multi Tasking Staff (Non-Technical), Havaldar (ஹவால்தார்) ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஹவால்தாரில் மட்டும் 3,603 பணியிடங்கள் இருக்கிறது. அதிலும், பட்டியலின வகுப்பினர் - 470; பழங்குடியின வகுப்பினர் - 300; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 922; பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் - 360 என பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, இரண்டு தாள்கள் கொண்ட பரிட்சை எழுத வேண்டியிருக்கும். முதல் தாளில் கணினி வழித் தேர்வு, உடல்திறன் தேர்வு, உடல்நிலைத் தேர்வு (ஹவால்தார் பதவிக்கு மட்டும்) நடக்கும். போலவே இரண்டாவது தாளில் ஒரு விளக்கத் தாள் இருக்கும்.
தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு மையங்களை பொறுத்தவரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டுமே. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, ஏப்ரல் 30, 2022. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளத்தை பொறுத்தவரை, 7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி வழங்கப்படும். வயது வரம்பு, ஜனவரி 1, 2022- கணக்குப்படி, 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
2) மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Power Grid Corporation of India (PGCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 16 டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கு. காஷ்மீர், லடாக் பகுதிகளில் பணிபுரிவதற்கான இந்த பணிக்கு, பொறியியல் துறைக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 70% மதிப்பெண்ணோடு 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். எழுத்து மற்றும் கண்ணி வழி தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த தேர்வுக்கு விண்ணப்ப கட்டணம், ரூ. 300 மட்டும்தான். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கு. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு வயது, ஏப்ரல் 20, 2022 - தேதிப்படி 27 வயதுக்குள் இருக்கவேண்டும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். https://www.powergrid.in என்ற இணையத்தின் மூலம் தகுதியுடையோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, ஏப்ரல் 20, 2022.
3) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 45 வெவ்வேறு துறையை சேர்ந்த பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பொதுவான தகுதிகளாக பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்கள், பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் ஆகியவை சொல்லப்பட்டிருக்கு. இவையன்றி, ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் ஒவ்வொரு சிறப்பு தகுதிகளும் அறிவிக்கப்பட்டிருக்கு. விரிவான விவரங்கள், யுபிஎஸ்சி வெப்சைட்டில் கிடைக்கும். அந்த லிங்க்-ஐ இங்கே க்ளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த தேர்வுக்கு, upsconline.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
4) தமிழகத்தில் காலியாக இருக்கும் 7,382 பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுது. டி.என்.பி.எஸ்.சி. பாலச்சந்திரன் கூறியிருக்கும் தகவலின்படி, இந்த பணியிடங்களில் 81, விளையாட்டுப் பிரிவினருக்கானதாக இருக்கும். 300 மதிப்பெண்களுக்கு - 200 கேள்விகளோடு நடைபெறும் இந்த தேர்வில், 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்போருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.
200 கேள்விகளில் தமிழ் மொழியில் 100 கேள்விகளும், பொது அறிவுப் பிரிவில் 100 கேள்விகளும் கேட்கப்படும். அதுல தமிழில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும். இந்த தேர்வுக்கு 25 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுது. இந்தத் தேர்வுடைய முடிவுகள், அக்டோபர் 2022-ல் வெளியாகும். விண்ணப்பிக்க கடைசி தேதி, ஏப்ரல் 28. இந்தத் தேர்வுக்கு குறித்த விவரங்களை தேர்வாணையத்தின் வெப்சைட்டில் காணலாம். கீழ டிஸ்க்ரிப்ஷனிலும், லிங்க் கொடுத்திருக்கிறோம்.
5) தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் சார்பாக காலியாக உள்ள 209 கதிரியக்க உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் கதிரியக்க உதவியாளர் சான்றிதழ் பயிற்சியை முடித்திருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது, ஜூலை 1, 2022 தேதியின்படி, ஒசி பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்து 32, 42, 50க்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயதுவரம்பில்லை. இந்த தகுதிகள் இருப்பவர்கள், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ரூ.600 கட்டி விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். எஸ்சி, எஸ்டி, அனைத்து பிரிவைச் சேர்ந்த கைம்பெண்கள் ரூ.300 கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 5, 2022.