மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
நாடு முழுவதும் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உள்கட்டமைப்பு, படித்து முடித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களின் வேலைவாய்ப்பு, கல்வியின் தரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து கணக்கிட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தரவரிசை பட்டியலை வெளியிடும்.
இதற்காக தனியாக ஒரு குழுவையும் அமைத்து வேலைப்பாடுகள் நடைபெறும். ஆண்டுதோறும் இதுபோன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது பெங்களூரில் இருக்க கூடிய ஐஐஎஸ்சி நிறுவனமும், மூன்றாவது இடத்தில் டெல்லியில் இருக்கக்கூடிய ஐஐடியும் உள்ளது.