நாட்டில் படிப்படியாக பள்ளிகளை திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ரன்தீப் குலேரியா இவ்வாறு கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அவர், இந்திய குழந்தைகள் கொரோனாவுக்கு எதிராக நல்ல எதிர்ப்பாற்றலை பெற்றுள்ளனர் என தெரிவித்தார். தொற்று கண்டறியப்படும் விகிதம், 5 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடலாம் என யோசனை தெரிவித்துள்ள அவர், ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கலாம் என்றார். கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பள்ளிகளை திறக்கும் நேரம் வந்துவிட்டதாக கூறிய அவர், குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கல்வியும் முக்கியம் என்பதை மறந்துவிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.