மீண்டும் கசிந்தது வினாத்தாள்; ஆனாலும் திருப்புதல் தேர்வில் மாற்றம் இல்லை என அறிவிப்பு

மீண்டும் கசிந்தது வினாத்தாள்; ஆனாலும் திருப்புதல் தேர்வில் மாற்றம் இல்லை என அறிவிப்பு
மீண்டும் கசிந்தது வினாத்தாள்; ஆனாலும் திருப்புதல் தேர்வில் மாற்றம் இல்லை என அறிவிப்பு
Published on

தமிழகத்தில் பள்ளிகள் அனைத்திலும் 10, 12 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடந்துவரும் நிலையில், மீண்டுமொருமுறை வினாத்தாள்கள் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ள 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாள், முன்கூட்டியே தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. மேலும் நாளை நடைபெற உள்ள 12-ம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாளும் இணையத்தில் கசிந்துள்ளது. ஏற்கெனவே 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 2 தினங்களாக வினாத்தாள்கள் கசிந்து வந்த நிலையில், இன்று மீண்டுமொருமுறை வினாத்தாள் கசிந்திருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மீண்டும் ஓர் வினாத்தாள் இப்படி கசிந்திருக்கும் நிலையில், “திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை” என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். மேலும் வினாத்தாள் வெளியானது தொடர்பாக இரண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

வினாத்தாள் கசிவுக்கு காரணமான நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்வு வழிமுறைகளை சரியாக பின்பற்றாத கல்வித்துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com