கரூர்: ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சியில் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தி அசத்திய மாணவர்கள்!

பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் விதமாக புதிய தலைமுறை சார்பில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி கரூர் புன்னஞ்சத்திரத்தில் உள்ள தி இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் நடைபெற்றது.
தி இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் புதிய தலைமுறை சார்பில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி
தி இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் புதிய தலைமுறை சார்பில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி புதிய தலைமுறை
Published on

பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் விதமாக புதிய தலைமுறை சார்பில் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி கரூர் புன்னஞ்சத்திரத்தில் உள்ள தி இந்தியன் பப்ளிக் ஸ்கூலில் 26.10.2024 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் 400 க்கும் மாணாக்கர்கள் பங்கேற்று தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

நிகழ்வினை பள்ளி தாளாளர் திரு அசோக் குமார் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இளநிலை பிரிவில் கருர் ஶ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா இண்டர்நேஷனல்  பள்ளி மாணவன் K. அரவிந்தன் முதல் பரிசினை வென்றார்.

முதுநிலை பிரிவில் பஞ்சம்பட்டி அரசு முன்மாதிரி மேல்நிலை பள்ளி மாணவர்கள் S.தினேஷ் மற்றும் P.ரமேஷ் இணை முதல் பரிசினை வென்றனர்.

முதல் மூன்று இடங்களை பிடித்த கண்டுபிடிப்புகளுக்கு கோப்பைகள்  மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.  கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பரிசுகளை  வழங்கி பாராட்டினார். பங்கேற்ற அனைத்து மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com