தனித்தேர்வர் செய்முறைத் தேர்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தனித்தேர்வர் செய்முறைத் தேர்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
தனித்தேர்வர் செய்முறைத் தேர்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
Published on

தமிழகத்தில் செய்முறைத் தேர்வில் தேர்ச்சிபெறாத தனித் தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுபற்றி தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ துணைத் தேர்வு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கவுள்ளது. தேர்வுமைய கண்காணிப்பாளர்கள் செய்முறைத் தேர்வு நடத்தப்படும் தேதி, இடம் குறித்த அறிவிப்பை தேர்வர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும். அதேபோல், ஏற்கெனவே செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வு செய்யத் தேவையில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோப்புப் படம் 

செய்முறைத் தேர்வில் பங்கேற்கும் தனித்தேர்வர்களின் மதிப்பெண்களைப் பதிவு செய்வதற்கான படிவங்கள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். ப்ளஸ் 2 படிவங்களை செப்டம்பர் 29ம் தேதிக்குள்ளும் ப்ளஸ் ஒன் படிவங்களை அக்டோபர் 8 ம் தேதிக்குள்ளும் பூர்த்திசெய்து தேர்வுத்துறைக்கு காலதாமதமின்றி அனுப்பிவைக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com