பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை!
Published on

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரிய 325 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. சீனியர் மேனேஜர் (Credit) - MMG Scale III
2. மேனேஜர் (Credit) - MMG Scale III
3. சீனியர் மேனேஜர் (Law) - MMG Scale III
4. மேனேஜர் (Law) - MMG Scale III
5. மேனேஜர் (HRD) - MMG Scale III
6. ஆபிசர் (IT) - JMG Scale III

காலிப்பணியிடங்கள்:
1. சீனியர் மேனேஜர் (Credit) - 51
2. மேனேஜர் (Credit) - 26
3. சீனியர் மேனேஜர் (Law) - 55
4. மேனேஜர் (Law) - 55 
5. மேனேஜர் (HRD) - 18
6. ஆபிசர் (IT) - 120

மொத்தம் - 325 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.03.2019
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: 24.03.2019

தேர்வுக்கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர் / முன்னாள் ராணுவத்தினர் - ரூ.600
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PWBD - ரூ.100 


சம்பளம்:
1. சீனியர் மேனேஜர் (Credit) - மாதம் ரூ.42,020 முதல் ரூ.51,490 வரை
2. மேனேஜர் (Credit) - மாதம் ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை
3. சீனியர் மேனேஜர் (Law) - மாதம் ரூ.42,020 முதல் ரூ.51,490 வரை
4. மேனேஜர் (Law) - மாதம் ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை
5. மேனேஜர் (HRD) - மாதம் ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை
6. ஆபிசர் (IT) - மாதம் ரூ.23,709 முதல் ரூ.42,020 வரை

வயது வரம்பு: (01.01.2019 அன்றுக்குள்)
1. சீனியர் மேனேஜர் (Credit) - 25 வயது முதல் 37 வயது வரை இருத்தல் வேண்டும்.
2. மேனேஜர் (Credit) - 25 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.
3. சீனியர் மேனேஜர் (Law) - 25 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.
4. மேனேஜர் (Law) - 25 வயது முதல் 32 வயது வரை இருத்தல் வேண்டும்.
5. மேனேஜர் (HRD) - 25 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.
6. ஆபிசர் (IT) - 25 வயது முதல் 28 வயது வரை இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
1. சீனியர் மேனேஜர் (Credit) - என்ற பணிக்கு, CA / ICWA / MBA அல்லது PGDM (Finance) அல்லது அதற்கிணையான பட்ட மேற்படிப்பை AICTE -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 5 வருட வங்கித்துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.  


2. மேனேஜர் (Credit) - என்ற பணிக்கு, CA / ICWA / MBA அல்லது PGDM (Finance) அல்லது அதற்கிணையான பட்ட மேற்படிப்பை AICTE -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 3 வருட வங்கித்துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.  


3. சீனியர் மேனேஜர் (Law) - என்ற பணிக்கு, சட்டப்படிப்பில் இளங்கலை பட்டத்தை, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 7- வருட சட்டத்துறை சார்ந்த பணி / பயிற்சி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.


4. மேனேஜர் (Law) - என்ற பணிக்கு, சட்டப்படிப்பில் இளங்கலை பட்டத்தை, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 3- வருட சட்டத்துறை சார்ந்த பணி / பயிற்சி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.


5. மேனேஜர் (HRD) - என்ற பணிக்கு, 2- வருட முதுகலை பட்டப்படிப்பை, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 3- வருட HR துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.


6. ஆபிசர் (IT) - என்ற பணிக்கு, MCA / B.E / B.Tech என்ற பட்டப்படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் / கம்யூட்டர் சயின்ஸ் / கம்யூட்டர் சயின்ஸ் & டெக்னாலஜி / ஐ.டி (IT) போன்ற பாடத்துறைகளில் ஏதேனும் ஒன்றை, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 1- வருட ஐ.டி துறை  சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின், www.pnbindia.in - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
https://www.pnbindia.in/Recruitments.aspx - என்ற இணைதளத்தில் சென்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com