சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
Published on

சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்த அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ மாணவர்கள் 6 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை நேரடியாக கட்டாயம் தேர்வு எழுத வேண்டும் என்ற முறைக்கு பதிலாக, விருப்பம் இருப்பவர்கள் மட்டும் நேரடியாக வந்து எழுதலாம் மற்றவர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தற்பொழுது தேர்வுகள் நடைபெற்று வருகிறது இந்த நேரத்தில் எப்படி ஆன்லைன் மூலமாக தேர்வுகளை எழுதுவது அனுமதிக்க முடியும். ஏற்கனவே தேர்வுகள் பட்டியலிடப்பட்டு விட்ட நிலையில் சில மாணவர்களுக்காக அதனை மாற்ற முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறினார். மேலும் கல்வி தொடர்பான விவகாரங்களில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் இதற்காக உள்ள அதிகாரிகள் நிலைமையின் தன்மையை உணர்ந்து பணிபுரிவார்கள் எனவும் நீதிபதிகள் கூறினர். கொரோனா விதிமுறைகள் முறையாக செயல்படுத்தப்படுகிறது என்ற மத்திய அரசின் வாதங்களை ஏற்று மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com