“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.1.80 லட்சம் எடுக்கப்பட்டு, அந்த மதிப்பீட்டில்தான் போட்டித் தேர்விற்கான புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் காலை - மாலை நேர சிற்றுண்டிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் கடந்த 02, 03, மற்றும் 04 (கடந்த 3 நாள்களாக) ஆகிய தேதிகளில் காலையில் மாதிரி தேர்வு நடைபெற்றது.
அன்றைய மாலை வேளைகளில் நடைபெற்ற வகுப்பில், காலையில் நடைபெற்ற தேர்வுக்கான பதில் மற்றும் அது தொடர்பாக மேலும் எழும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது என்பன போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், விலங்கியல் தொடர்பாக நேற்று மாலை நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் கற்பகமே நேரில் வந்து நடத்தினார். மாவட்ட ஆட்சியரே வந்து தங்களுக்காக பாடம் நடத்தியதை மாணவர்கள் உற்சாகத்துடன் கவனித்தனர். தமிழ்நாட்டில் குடிமைப்பணி தேர்வுகளுக்கு தேர்வாவோர் விகிதம் குறைவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஆட்சியரின் இந்த செயல் அரசு தரப்பிலிருந்தும் பாராட்டை பெற்று வருகிறது.
குடிமைப்பணி கனவுகள், அரசு அதிகாரியாகும் கனவுகளுடன் வளர்ந்து வரும் ஏழை எளிய மாணவர்களுக்கும் இதுபோன்ற திட்டங்கள் பெரும் உதவியாக இருப்பதாக அவர்களே தெரிகிறது.