10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் போதிய வசதிகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15-ஆம் தேதி தொடங்கி ஜூன் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்வு மையங்களில் போதிய வசதிகள் உள்ளனவா எனபதை முதன்மை தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்வு மையத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதா, தூய்மையாக உள்ளதா, சானிடைசர் உள்ளனவா உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு ஏற்கெனவே அமைக்கபட்ட 3825 மையங்கள் முதன்மை மையங்களாகவும், தேர்வு மையங்களாக அமைக்கப்பட்ட பள்ளிகள், துணை மையங்களாகவும் கருதப்படுவதாக கூறப்பட்டுள்ளது.