எம்.பி.ஏ படித்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கான விடைகளுடன் சொல்லி அடிப்போம்..
1.சார், நான் ஹெச்.ஆர் துறையில் எம்.பி.ஏ படித்திருக்கிறேன். ரூ.25000 சம்பளத்தில் வேலை கிடைக்குமா?.
எம்.பி.ஏ படிப்பில் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதை வைத்து தான் சம்பள உயர்வை தீர்மானிக்க முடியும்.
2. எம்.பி.ஏ மார்கெட்டிங் முடித்தால் வேலை கிடைக்குமா?
மார்கெட்டிங் துறை இல்லாமல் எந்த கம்பெனியும் இயங்குவதில்லை. இதற்கான வேலைவாய்ப்புகளும் குறைய வாய்ப்புகள் இல்லை.
3. எம்.பி.ஏ படித்தவுடன் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க முடியுமா?.
படிப்புடன் அனுபவமும் இருந்தால் மட்டுமே நிர்வாகத் திறமையை அதிகரித்துக் கொண்டு வெற்றிக்கான வழிகளை செய்திட முடியும்.
4. ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல எம்.பி.ஏ அவசியமா?.
நிறுவனத்தின் வெற்றிக்கு படிப்பை விட அனுபவமே முக்கியம். அனுபவத்துடன் எம்.பி.ஏ படிப்பு இருந்தால் மேலும் சிறப்பு.
5. எந்த பிரிவுகளில் எம்.பி.ஏ படிப்பை படித்தால் நன்மைகள்?
நம் எதிர்கால தேவைக்கு ஏற்ப மார்கெட்டிங் அல்லது ஹெச்.ஆர் அல்லது பைனான்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
எம்.பி.ஏ என்பது தொழில் மற்றும் நிர்வாகம் சம்பந்தமான அறிவை வளர்த்திக்கொள்வதற்கான படிப்பு மட்டுமே. படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. வேலைவாய்ப்புக்கு என்ன தேவையோ, அதை படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும்.
மேலும் சொல்லி அடி தொடர்ந்து படிக்க