ஆன்லைன் வழிக்கல்வி- அரசின் விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - தமிழக அரசு

ஆன்லைன் வழிக்கல்வி- அரசின் விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - தமிழக அரசு
ஆன்லைன் வழிக்கல்வி- அரசின் விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - தமிழக அரசு
Published on

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. 

தமிழகத்தில் மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனிடையே மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் ஆன்லைன் வழியே கல்வியை புகட்டலாம் என அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் ஆன்லைன் வழிக் கல்வியில் அரசின் விதிமுறைகள் மீறல், மாணவர்களின் பாதுகாப்பு நலன்  சம்பந்தமாக சரண்யா மற்றும் விமல்மோகன் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது பேசிய நீதிபதிகள் மாணவர்களின் நலன் அனைவரின் பொறுப்பு. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க அமைப்பை உருவாக்க வேண்டும். மாணவர்கள் கற்கும்போது ஆபாச இணையதளங்கள் நுழைய முடியாதபடி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினர்.

இதனைத்தொடர்ந்து பேசிய தமிழக அரசு. ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியது. இறுதியில் இவ்வழக்கு தொடர்பான விசாரணையை தேதிக் குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com