இந்திய தபால்துறையில், கிராமின் டக் சேவாக் என்ற பணிக்கு தமிழகத்தில் மட்டும் 4,442 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
கிளை தபால் அலுவலர் (BPM)
உதவி கிளை தபால் அலுவலர் (ABPM)
Dak Sevak
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் மட்டும் மொத்தம் = 4,442 காலிப்பணியிடங்கள் உள்ளன.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 15.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2019
வயது:
குறைந்தபட்சமாக (15.03.2019 க்குள்) 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம்:
1. BPM என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.12,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,480 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
2. ABPM / Dak Sevak என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.29,380 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர் / ஆண்கள் - ரூ.100
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் - தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.
ஆஃப்லைனில் தேர்வுக்கட்டணத்தை செலுத்துவோர் தலைமை தபால் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள ஏதேனும் ஒரு தபால் நிலையத்திலோ சென்று செலுத்தலாம்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
1. உள்ளூர் மொழியில் பேச, எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
2. குறைந்தபட்சம் 60 நாட்கள் அடிப்படை கம்யூட்டர் பயிற்சி பெற்றவராக இருத்தல் அவசியம்.
3. சைக்கிள் ஓட்டத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற இணையத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
விண்ணப்பிக்க தேவையானவை:
ஸ்கேன் செய்யப்பட்ட 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், புகைப்படம், கையெழுத்து, கணினி சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அந்த சான்றிதழ் போன்றவை அவசியம்.
மேலும், இது குறித்த முழு விவரங்களை பெற
www.tamilnadupost.nic.in - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.