ரயில்வேயில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு : 1 லட்சம் காலியிடங்கள்!

ரயில்வேயில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு : 1 லட்சம் காலியிடங்கள்!
ரயில்வேயில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு : 1 லட்சம் காலியிடங்கள்!
Published on

இந்திய ரயில்வேயில், லெவல்-1 பிரிவில் 1,03,769 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பை ரயில்வேத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மண்டலத்துக்கு மட்டும் 9,579 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: 


அசிஸ்டெண்ட் (WorkShop)
அசிஸ்டெண்ட் (Loco Shed)
அசிஸ்டெண்ட் (Pointsman)
அசிஸ்டெண்ட் (Signal & Telecom)
அசிஸ்டெண்ட் (Track Machine)
டிராக் மெயிண்டனர் கிரேடு IV , இன்னும் பல.

முக்கிய தேதிகள்:


அறிவிப்பு வெளியான தேதி: 23.02.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 12.03.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.04.2019
ஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 23.04.2019
ஆஃப்லைன் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 18.04.2019, மதியம் 01.00 மணி
ஆன்லைனில் விண்ணப்பங்களை முழுமையாக சமர்பிக்க கடைசி தேதி: 26.04.2019
கணினி வழித்தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் - அக்டோபர் 2019 

வயது வரம்பு:

குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 33 வயது வரையும் இருத்தல் வேண்டும் ( 01.07.2019 அன்று).


தேர்வுக்கட்டணம் :

பொதுப் பிரிவினர் - ரூ.500  
மற்ற விண்ணப்பதாரர்கள் (எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், திருநங்கை உட்பட) - ரூ.250 

குறிப்பு :

 முதற்கட்ட கணினி வழித்தேர்வுக்குப் பின்பு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து ரூ.400 ரூபாயும், மற்ற விண்ணப்பதாரர்கள் செலுத்தியதிலிருந்து ரூ.250 ரூபாயும் விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும்.

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:


ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம். 
ஆன்லைனில் இன்டர்நெட் பேங்கிங் அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம். ஆஃப்லைனில் எஸ்.பி.ஐ சல்லான் மூலமாகவோ அல்லது தபால் நிலையத்தில் உள்ள சல்லான் மூலமாகவோ தேர்வுக்கட்டணத்தை செலுத்தும் வசதியும் உண்டு.

கல்வித்தகுதி:


குறைந்தபட்சமாக 10 ஆம் வகுப்பில் தேர்ச்சியோ அல்லது ஐடிஐ சான்றிதழ் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
கல்லூரியில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருப்பவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் விண்ணப்பிப்போர், https://nr.rly-rect-appn.in/rrbgroupd2019/ அல்லது www.rrcmas.in- என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யப்படும் முறைகள்:
1. கணினி வழித்தேர்வு
2. உடற்தகுதி தேர்வு

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,
http://www.rrbcdg.gov.in/uploads/CEN-No-RRC-01-2019.pdf அல்லது https://nr.rly-rect-appn.in/rrbgroupd2019/cen.pdf- என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com