என்.எல்.சி நிறுவனத்தில் அதிகாரி பணி - விண்ணப்பிக்கத் தயாரா?

என்.எல்.சி நிறுவனத்தில் அதிகாரி பணி - விண்ணப்பிக்கத் தயாரா?
என்.எல்.சி நிறுவனத்தில் அதிகாரி பணி - விண்ணப்பிக்கத் தயாரா?
Published on

நெய்வேலியில் உள்ள இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், கிராடுவேட் எக்சிக்யூடிவ் டிரைனி( Graduate Executive Trainee), இண்டஸ்ட்ரியல் டிரைனி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சிப் பணிகள்:

1. கிராடுவேட் எக்சிக்யூடிவ் டிரைனி
2. இண்டஸ்ட்ரியல் டிரைனி (பைனான்ஸ்)

காலியிடங்கள்:

1. மெக்கானிக்கல் - 125
2. எலக்ட்ரிக்கல் (EEE)- 65
3. எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் (ECE) - 10
4. சிவில் - 05
5. கண்ட்ரோல் & இன்ட்ஸ்ரூமெண்டேசன் - 15
6. கம்ப்யூட்டர் - 05
7. மைனிங் - 05
8. ஜியோலஜி - 05
9. பைனான்ஸ் - 14
10. HR - 10
11. இண்டஸ்ட்ரியல் டிரைனி (பைனான்ஸ்) - 56

மொத்தம் = 315 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
1. கிராடுவேட் எக்சிக்யூடிவ் டிரைனி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 18/03/2020, காலை 10.00 மணி முதல்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17/04/2020
தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 26/05/2020 மற்றும் 27/05/2020

2. இண்டஸ்ட்ரியல் டிரைனி:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26/03/2020, மாலை 5.00 மணி வரை

வயது வரம்பு: (01/03/2020 அன்றுக்குள்)

பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளும், ஓ.பி.சி பிரிவினர் 33 வயதுக்குள்ளும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்:

1. UR / EWS / OBC (NCL) - ரூ.834 (ரூ.500 + ரூ.354)
2. SC / ST / PwBD / Ex-SM - ரூ.354

பயிற்சிக் கால அளவு:

குறைந்தபட்சமாக 12 மாதங்கள் வரை பயிற்சி வழங்கப்படும்.

குறிப்பு: பயிற்சிப் பணிக்கு தகுந்தவாறு பயிற்சியின் கால அளவு மாறுபடும்.

பயிற்சிகால உதவித்தொகை:

1. கிராடுவேட் எக்சிக்யூடிவ் டிரைனி:
குறைந்தபட்சமாக ரூ.50,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,60,000 வரை மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.

2. இண்டஸ்ட்ரியல் டிரைனி:
குறைந்தபட்சமாக ரூ.22,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.

குறிப்பு: பயிற்சிப் பணிக்கேற்றவாறு உதவித்தொகையில் மாற்றங்கள் உண்டு.

கல்வித்தகுதி:
இளங்கலை பட்டப்படிப்பில் அதாவது பி.இ (Full Time / Part Time - Mech / EEE / ECE / Civil / E&I / CSE / Mining / Geology)/ சி.ஏ (CA) / MBA போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு: பணிக்கேற்றவாறு கல்வித்தகுதியில் மாற்றங்கள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், https://www.nlcindia.com/new_website/index.htm அல்லது https://www.nlcindia.com/new_website/careers/CAREER.htm - போன்ற ஏதேனும் ஒரு இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பு:

1. இதற்கு முன் இப்பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்சமயம் பயிற்சியில் இருப்போர் மீண்டும் பயிற்சிப் பெற தகுதியில்லை.

2. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, https://www.nlcindia.com/new_website/careers/advt/GET-MAR-2020.pdf மற்றும் https://www.nlcindia.com/new_website/careers/Advt_04032020-ITF.pdf- போன்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com