மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்விற்கான விண்ணப்பங்கள் இன்று மதியம் 3 மணி முதல் வரும் மார்ச் 15ம் தேதி இரவு 11.55 வரை வரும் சமர்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில், வரும் 2020 கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புக்கான NEET PG 2021 நீட் தேர்வுக்கு இன்று மதியம் 3 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய தேர்வு வாரியம் http://natboard.edu.in/ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, MD/MS மற்றும் PG Diploma படிப்புகளில் சேர விரும்பும் மருத்தவம் படித்தவர்கள், NEET PG 2020 க்கு விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் இந்த நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.