நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்குப் பெற வழிவகுக்கும் தமிழக அரசின் வரைவு சட்டம், சட்ட ரீதியாக செல்லுபடியாகாது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு அதிகாரி ஒருவரிடம் இக்கருத்தை தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவசர சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பாதகமாக வந்தால் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என அந்த அதிகாரி கூறியதாகவும் தெரிகிறது. நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு அளிக்க உள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.