இன்று நடைபெறும் நீட் தேர்வு: மாணவர்களுக்கான சில முக்கிய தகவல்கள்!

இன்று நடைபெறும் நீட் தேர்வு: மாணவர்களுக்கான சில முக்கிய தகவல்கள்!
இன்று நடைபெறும் நீட் தேர்வு: மாணவர்களுக்கான சில முக்கிய தகவல்கள்!
Published on

ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் எடுத்த புகைப்படத்தின் கலர் நகல் ஹால் டிக்கெட்டில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

ஹால் டிக்கெட்டின் 2-ம் பக்கத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் புகைப்படமும் போடப்பட்டிருக்கும் கையெழுத்தும், முதல் பக்கத்தில் உள்ள புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஒத்துப் போக வேண்டும்

2-ம் பக்கத்தை ஒட்டப்பட்ட புகைப்படத்துடன் கொண்டு வர வேண்டும்

இல்லையென்றால் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்

மாணவர்களின் கையெழுத்து ஹால் டிக்கெட்டின் பக்கம் இரண்டில் புகைப்படத்தின் மீது இடதுபக்கம் இருக்க வேண்டும்

பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட்டில் உரிய இடத்தில் இருக்க வேண்டும்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாணவரும் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் வந்து சேர வேண்டும்

பிற்பகல் 1.30 மணிக்கு மேல் தேர்வு மைய நுழைவாயில் மூடப்படும்

மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

தேர்வு மையத்தை ஒரு நாள் முன்பே சென்று பார்த்து விடுவது நல்லது

பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, 12-ம் வகுப்பு ஹால் டிக்கெட், ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை என்று ஏதாவது ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்

செல்போன்களில் உள்ள அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது

தேர்வு எழுதி முடித்த பின், OMR தாளை தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வினாத்தாளை மட்டுமே வெளியே கொண்டுவர வேண்டும்

தேர்வறை கண்காணிப்பாளர் அனுமதி இல்லாமல் வெளியே செல்லக் கூடாது

தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என்று இரண்டு முறை ,Attendance படிவத்தில் நேரம் குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும்

இரண்டாவது முறை கையெழுத்திடாவிட்டால் விடைத்தாள் சமர்ப்பிக்கவில்லை என்று கருதப்படும்

மாணவர்களின் வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்

மாணவர்கள், வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், கூடுதல் புகைப்பட நகல்கள், ஹால் டிக்கெட்டை வைத்திருக்கலாம்

எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் உள்ளிட்டவை கொண்டு வரக்கூடாது

தேர்வு மையத்தில் வழங்கப்படும் N95 முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்

தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

-எம்.ரமேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com