2021 ஆம் ஆண்டு முதல் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சையின்ஸ் படிப்புகளுக்கும் இனி நீட்தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி 11 மொழிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு முதல் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சையின்ஸ் படிப்புகளுக்கும் இனி நீர் தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் தற்போது செவிலியர் படிப்புகளுக்கும் நீட் தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.