பல் மருத்துவப் படிப்புக்கான நீட் கட் ஆஃப் மதிப்பெண்களை இந்திய பல் மருத்துவ கவுன்சில் குறைத்துள்ளது.
அதன்படி, தேர்வை எழுதும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும்10 சதவிகித மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் 50 சதவிகிதத்தில் இருந்து 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஓபிசி, எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் 40 சதவிகிதத்தில் இருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 45 சதவிகிதமாக இருந்த தகுதி மதிப்பெண், தற்போது 35 சதவிகிதமாக மாற்றப்பட்டுள்ளது. 2019 - 2020 கல்வி ஆண்டுக்கு மட்டும் இந்த மதிப்பெண் குறைப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 சதவிகித மதிப்பெண் குறைப்பு மூலம் தகுதி பெறும் மாணவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரைவில் தேசிய தேர்வு முகமை விளக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.