மருத்துவ மாணவர் சேர்க்கை: மாநில பாடத்திட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே இடம்?

மருத்துவ மாணவர் சேர்க்கை: மாநில பாடத்திட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே இடம்?
மருத்துவ மாணவர் சேர்க்கை: மாநில பாடத்திட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே இடம்?
Published on

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு ‌நடைபெறவுள்ளதால், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 500 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு, நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நாளை தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததால், தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இன்று பிற்பகல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, நாளை முதல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் என தெரிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வு முடிவின்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவு என்றாலும், மதிப்பெண் அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றனர். அதனால், மொத்தமுள்ள 2ஆயிரத்து 594 இடங்களில், 2ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கே கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com