சிவகங்கை | பலகட்ட முயற்சியால் சாத்தியமானது 11-ம் வகுப்பு நாகலாந்து மாணவியின் தமிழ்வழிக் கல்வி கனவு!

நாகலாந்தை சேர்ந்த ஒரு மாணவி, தமிழ் வழிக் கல்வியில் 11-ம் வகுப்பு சேர்வதற்காக சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். ஆனால் சீட் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில் இன்று பள்ளியில் சேர்ந்துள்ளார் அம்மாணவி.
நாகலாந்து மாணவி அக்ம்லா
நாகலாந்து மாணவி அக்ம்லா புதிய தலைமுறை
Published on

செய்தியாளர் - நைனா முகம்மது.

நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் ரூத் (40). இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரியில் ஒரு தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியையாக உள்ளார். தனது குடும்பத்துடன் 13 ஆண்டுகளாக இவர் சிங்கம்புணரியில் வசித்து வருகிறார் இவர்.

அதே பள்ளியில் அவரது மகள் அக்ம்லா (16) எட்டாம் வகுப்பு வரையும், மற்றொரு மகள் மவுங்கலா (14) ஐந்தாம் வகுப்பு வரையும் படித்து வந்துள்ளனர். அதன்பின் கொரோனா காலக்கட்டம் வந்துவிட்டதால், மகள்கள் இருவரையும் நாகலாந்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார் தாய் ரூத். அங்கு அக்ம்லா 10-ம் வகுப்பு வரையும், மவுங்கலா 7-ம் வகுப்பு வரையும் படித்தனர்.

அக்ம்லா
அக்ம்லா

சில மாதங்களுக்கு முன், மீண்டும் சிங்கம்புணரிக்கு வந்த அவர்களை, சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க முயன்றுள்ளார் ரூத். அதில் மவுங்கலா 8-ம் வகுப்பில் சேர்த்து கொள்ளப்பட்டார். ஆனால் அக்ம்லா 10-ம் வகுப்பு முடித்ததாக கூறியதால், அவரை பள்ளியில் சேர்க்க பள்ளி நிர்வாகம் குடிபெயர்வு, உண்மைத் தன்மை சான்று கேட்டனர்.

ஆனால், நாகலாந்தில் அந்த சான்றுகளை பெற முடியாததால் அவரை பள்ளியில் சேர்ப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது. இதனால், பள்ளியில் சேர முடியாமல் தவித்து வந்துள்ளார் அக்ம்லா. இதுகுறித்து, செய்தியாளர்கள் வழியாக அக்ம்லா சில கோரிக்கைகள் வைத்தார். இதையடுத்து இந்த விவகாரம் கவனிக்கத்தக்க செய்தியாக பரவியது. அதைக்கண்ட மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடந்த சனிக்கிழமை ‘அக்ம்லாவை பள்ளியில் சேர்க்கவும்’ என உத்தரவிட்டனர்.

அக்ம்லா
அக்ம்லா

இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை, மாணவி அக்ம்லாவிற்கு பள்ளியில் சேர இடம் அளித்தார். முன்னதாக சிங்கம்புணரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அபர்ணா, நாகலாந்து மாணவி அக்ம்லாவின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துகள் கூறினார். மேலும், கல்வி சம்பந்தமான உதவிகள் தேவைப்படும் எனில் எந்த நேரத்திலும் தன்னை அணுகலாம் என உறுதியளித்தார்.

அக்ம்லா
அக்ம்லா

பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் இன்று சேர்ந்துள்ள நாகலாந்து மாணவி அக்ம்லா செய்தியாளர்களிடம் பேசும் போது, ”பள்ளியில் சேர்வதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து நான் தடையின்றி 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு தேர்வு எழுதுவதற்கு எனக்கு தமிழக அரசு, தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், எனது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

நாகலாந்து மாணவி அக்ம்லா
மதுரை: அமைச்சர் வீட்டருகே வாக்கிங் சென்றபோது, நாதக நிர்வாகியை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com