நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் என் - 95 முகக்கவசம் வழங்கப்படும் என்றும், அதனை அணிந்துதான் தேர்வெழுத வேண்டும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தேர்வறைக்குள் மாணாக்கர் ஹால் டிக்கெட், 50 மில்லி சானிடைசர் பாட்டில், தெளிவாக தெரியக்கூடிய குடிநீர் பாட்டில் ஆகியவை கொண்டுச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் தேர்வு நடைபெறுவதால், ஹால் டிக்கெட்டின் முதல் பக்கத்தில், பெருந்தொற்று தொடர்பான சில விவரங்களை பூர்த்திசெய்ய தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக தேர்வுக்கு முந்தைய 14 நாட்களில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இருந்ததா? நோய் அறிகுறி இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தீர்களா? என்பன போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. தேர்வெழுதும் மாணவ - மாணவியர் பிற்பகல் 1 மணியிலிருந்து 1.30க்குள் வந்துவிட வேண்டும் என்றும், அதன் பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.