ஐஐடி-களில் முதுநிலை படிப்பில் மூவாயிரத்திற்கும் அதிகமான காலியிடங்கள் - மத்திய அரசு

ஐஐடி-களில் முதுநிலை படிப்பில் மூவாயிரத்திற்கும் அதிகமான காலியிடங்கள் - மத்திய அரசு
ஐஐடி-களில் முதுநிலை படிப்பில் மூவாயிரத்திற்கும் அதிகமான காலியிடங்கள் - மத்திய அரசு
Published on

2021-22 கல்வியாண்டில் நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்பில் மூவாயிரத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐஐடி, என் ஐ டி, ஐ ஐ ஐ டி, உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்கள் குறித்த தகவல்களை மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதன்படி 2021-22 கல்வி ஆண்டில் ஐஐடிகளில் இளநிலை படிப்புகளில் 361 இடங்களும், முதுநிலைப் படிப்பில் 3083 இடங்களும் பி எச்டி படிப்புகளில் ,1852 இடங்களும் காலியாக உள்ளது.

என்ஐடி கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை இளநிலை படிப்புகளில் 685 இடங்களும், முதுநிலைப் படிப்புகளில் 3413 இடங்களும், பி எச் டி படிப்புகளில் 914 இடங்களும் காலியாக உள்ளது.

ஐ ஐ ஐ டி கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் 510 இடங்களும், முதுநிலைப் படிப்புகளில் 813 இடங்களும், பிஎச்டி படிப்புகளில் 527 இடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளுக்கு GATE நுழைவுத்தர்வு , JEE நுழைவுத் தேர்வுகள் உள்ளிட்டவை எல்லாம் வைக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் இடங்கள் நிரப்பப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் என்பதால், அனைத்து தகுதிகளும் நிரம்பிய மாணவர்களுக்கு மட்டுமே இடங்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com