மனித உரிமைகள் பாடத்தை சட்டப் படிப்பில் சேர்ப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சென்னையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பாஸ்கரன், சட்ட கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பாடத் திட்டங்களில் மனித உரிமை பாடத்தை சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பேசிய அமைச்சர் ரகுபதி, முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனி நபர்களை பாதிக்காத வகையில் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும், பிறரை பாதிக்கும் பட்சத்தில் தான் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். 7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்படி ஆளுநர் விரைந்து முடிவெடுப்பார் என நம்புவதாகவும் அமைச்சர் ரகுபதி கூறினார்.