துணை மருத்துவபடிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2022-23 ம் ஆண்டு துணை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 87,764 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2000 விண்ணப்பங்கள் குறைவாக வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஎஸ்சி நர்சிங், பி ஃபார்ம், உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகள் 348 சுயநதி மருத்துவக் கல்லூரிகளில் 17,843 இடங்கள் உள்ளன.
துணை மருத்துவ படிப்புகளுக்கு வரும் புதன்கிழமை முதல் பத்து நாட்களுக்கு ஆன்லைன் வழியில் கலந்தாய்வு நடைபெறும் அதன் பிறகு ஒரு வார கால இடைவெளிக்கு பிறகு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தேசிய தேர்வு முகமை கட் ஆப் மதிப்பெண்களை மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு வழங்கியவுடன் தொடங்கும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று 2022-2023 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. @mkstalin #masubramanian #TNHealthminister pic.twitter.com/VlwkcTYptK
— Subramanian.Ma (@Subramanian_ma) September 16, 2022

இந்த ஆண்டு MBBS படிப்புகளில் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 50 இடங்கள் கூடுதலாக வழங்கப்படும் மருத்துவ இடங்கள் அதிகரிப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சென்னை மற்றும் கோயம்புத்தூரில் சற்று அதிகரித்திருக்கிறது பொதுமக்கள் பூஸ்டர் போஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஆர்வம் காட்ட வேண்டும் அதேபோன்று உங்க கோசம் அணிந்து கொள்வதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.