”மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்து வருகிறோம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

”மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்து வருகிறோம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்
”மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்து வருகிறோம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on

கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ. ஆக நியமனம் செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட துறை சார்ந்த அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்துள்ள பேட்டியில், “கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ. -ஆக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரின் பின்புலம் குறித்து ஆராயக் கூடிய பணி நடைபெற்று வருகிறது.

அவரைப் பற்றி வரக்கூடிய தகவல்கள் உண்மையாக இருந்தால், ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நபர்களிலிருந்து தகுதியான ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார். ஆனால் தற்போது எந்த முடிவுக்கும் நாம் செல்ல முடியாது. விசாரணை நடைபெற்று வருகிறது. அவரைப் பற்றிய பின்புலம் முழுமையாக தெரிந்தப் பிறகு தான் முடிவு எடுக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்க வேண்டிய தகவல்களை கொடுத்து விட்டோம். இனி விரைந்து அவர்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விதி உள்ளது, அந்த அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த ஆண்டில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com