அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் அரசுப் பள்ளி மாணவி மருத்துவக் கல்வி பயில முடியாமல் போனது.
அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போன மாணவி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு நேர்காணலில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் அனுப்பிய கடிதம் தனக்கான மருத்துவ இட ஒதிக்கீடு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாணவி கேள்வி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் ரோசனை பகுதியில் சந்திரலேகா வீட்டிற்கு அருகில் உள்ள திண்டிவனம், ரோசனையில் உள்ள தாய்த்தமிழ்ப் பள்ளியில் மொட்டு (எல்.கே.ஜி), மலர் (யு.கே.ஜி) முதல் 8-ஆம் வகுப்பு வரையில் பயின்றுள்ளார். மேற்படி சுயநிதிப் பள்ளியில் குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 12(1)(சி) யின்படி அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி அளித்துவந்ததால்தான் மேற்படி பள்ளியில் தொடர்ந்து படித்துவந்தார். அடுத்து 8-வது வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை, வீட்டிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள முருங்கம்பாக்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளார்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 447/500 (89.4%)
11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 456/600(76.0%)
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 /600 (78.5%)
மதிப்பெண்கள் பெற்று தொடர்ந்து மூன்று பொதுத்தேர்வுகளிலும் பள்ளியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்று கல்வியிலும் கல்வி இணைச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கியதைப் பாராட்டி சந்திரலேகாவுக்கு 2017-2018 இல் ”தமிழ்நாடு அரசு பெருந்தலைவர் காமராஜர் விருது” வழங்கப்பட்டுள்ளது.
சந்திரலேகா மேற்படி பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும்போது அதாவது 2018-2019 மற்றும் 2019-2020 கல்வி ஆண்டுகளில் இயற்பியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு முழுநேர ஆசிரியர்கள் இல்லாத நிலையிலும் 11-ஆம் வகுப்பில் 76.0%, 12-ஆம் வகுப்பில் 78.5% பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு நடத்திய நீட்தேர்வு பயிற்சியில் கலந்துகொண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்று திண்டிவனம் நகரில் 2-வது இடத்திலும், மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற 52 அரசுப் பள்ளி மாணவர்களில் 10-வது இடத்திலும் மாநில அளவில் தேர்ச்சி பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 747 பேரில் 271-வது இடத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவி சந்திரலேகா விற்கு நேர்காணலுக்கான அழைப்பு வரவில்லை. அதனால் சந்திரலேகா
27.08.2020 அன்று அண்ணா பல்கலைக் கழகம், கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் (B.E. Civil) தமிழ் வழியில் சேர்ந்துள்ளார்.
7.5% உள் ஒதுக்கீட்டில் 04.01.2021 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொள்ள எவ்வித அழைப்பும் வரவில்லை. இந்நிலையில், சந்திரலேகா கலந்தாய்வில் கலந்து கொண்டதாகவும், ''அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள் இருந்த போதிலும் அவ்விடங்களை தேர்வு செய்ய விருப்பமின்றி விலகி விட்டுள்ளார்' எனவும் அவரது முகவரிக்கு ஒரு கடிதம் தமிழக அரசு மூலமாக வந்துள்ளது.
நேர்காணலுக்கு அழைக்காமலே நேர்காணலில் கலந்து கொண்டதாகவும் தனக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்வியை வேண்டாம் என தவிர்த்து விட்டதாகவும் தான் பதில் அளித்ததாக தனக்கு மருத்துவ கவுன்சில் மூலமாக ஒரு கடிதம் வந்திருப்பது சந்திரலேகாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து அவருடைய தாயார் மீண்டும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தன் மகளை எப்படியாவது எம்பிபிஎஸ் படிப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஏழை மாணவி ஒருவரின் மருத்துவ படிப்பு கனவாகிப் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி ஆணையத்தின் தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜன் கூறும்போது, சந்திரலேகா என்று இரண்டு பெயர் இருந்திருக்கலாம். அவர் அரசுப்பள்ளியில் படித்தீர்களா என விண்ணப்பத்தில் கேட்டிருந்த போது இல்லை என பதில் அளித்திருந்தார். பொதுப் பிரிவுக்கு அவரை கவுன்சிலிங் அழைத்திருந்தோம் ஆனால் சந்திரலேகாவின் பெற்றோர் இதுதொடர்பாக எந்த கடிதமும் வரவில்லை என்று கூறியிருக்கிறார்.