தமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு!

தமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு!
தமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு!
Published on

தமிழக நீதிமன்றங்களில், மாவட்ட நீதிபதி (Entry Level) காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
மாவட்ட நீதிபதி - District Judge (Entry Level)

காலியிடங்கள்:
மொத்தம் = 32 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 12.12.2019
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 12.12.2019 (இன்று முதல்)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.01.2020
வங்கிகள் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 10.01.2020

தேர்வு நடைபெறும் தற்காலிக தேதிகள்:
முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி - மார்ச், 2020 (காலை & மதியம்)
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி - ஜூன் 2ஆவது வாரம், 2020 (காலை & மதியம்)
நேர்காணல் (Viva-Voce) நடைபெறும் தேதி - ஆகஸ்ட், 2020

தேர்வுக்கட்டணம்:
1. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் - ரூ. 2,000
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / விதவைகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

மாத ஊதியம்:
மாவட்ட நீதிபதி - ரூ.51,550 முதல் ரூ.63,070 வரை

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
1. பொது பிரிவினர் மற்றும் பிற மாநிலத்தவர்கள் - 35 வயது முதல் 45 வயது வரை 
2. எஸ்.சி / எஸ்.டி / ஓபிசி பிரிவினர் - 35 வயது முதல் 48 வயது வரை

கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், இளங்கலை சட்டப்படிப்பை பயின்று (டிகிரி) பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் குறைந்தபட்சமாக 7 வருடங்கள் வழக்கறிஞராக பணிபுரிந்திருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில், https://www.mhc.tn.gov.in/recruitment/login (அல்லது) www.tn.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறைகள்:
1. முதல்நிலை தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. நேர்காணல் (Viva-Voce)

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_2_2019.pdf - என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com