TNPSC முதல் UPSC வரை... இந்த வாரம் வரும் தேர்வு விண்ணப்ப கடைசி தேதிகள்!

TNPSC முதல் UPSC வரை... இந்த வாரம் வரும் தேர்வு விண்ணப்ப கடைசி தேதிகள்!
TNPSC முதல் UPSC வரை... இந்த வாரம் வரும் தேர்வு விண்ணப்ப கடைசி தேதிகள்!
Published on

கொரோனா தொற்று முடிவுக்கு வந்தபின்னர், அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய தொடர் அறிவிப்புகள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. அப்படி சமீபத்தில் வந்த சில அரசு வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி, இந்த வாரத்தில் வருகின்றது. அதுபற்றிய சின்ன தொகுப்பு இங்கே!

* வடகிழக்கு ரயில்வே

வடகிழக்கு ரயில்வே சார்பில் ஸ்போர்ஸ் கோட்டாவின் கீழ் குரூப்-சி பணியிடங்களுக்காக சில வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 26-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கிய இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்றே கடைசி தேதி (ஏப்ரல் 25, 2022). இந்தத் தேர்வுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்களே விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பில் அறிவியல் முன்னிலை பாடமாக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள், 18 முதல் 25 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க: ner.indianrailways.gov.in

* எஸ்.எஸ்.சி. எம்டிஎஸ் 2021

Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) ஆகிய தேர்வுகளுக்கான அறிவிப்புகளை மத்திய அரசின் ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 22ம் தேதி முதல் ஆன்லைனில் கிடைக்கிறது. இதில் சி.பி.என்.-ன் MTS and Havaldar (வருவாய்த்துறையின் கீழ்) விண்ணப்பிக்க, 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஹவில்தாரிலேயே சி.பி.ஐ.சி.-ன் கீழ் பணிக்கும், ஒருசில MTS பணிக்கும் விண்ணப்பிக்க 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30, 2022-ம் தேதிதான் இறுதிதேதி. விண்ணப்பத்தில் திருத்தம் ஏதும் செய்ய வேண்டுமென்றால் அது மே 5 முதல் மே 9 வரை செய்யலாம்.

விண்ணப்பிக்க: ssc.nic.in

* யு.பி.எஸ்.சி ஐ.இ.எஸ் / ஐ.எஸ்.எஸ். 2022

யு.பி.எஸ்.சி. சார்பில் ஐ.இ.எஸ். / ஐ.எஸ்.எஸ் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன. ஏப்ரல் 6-ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுவரும் நிலையில், இதன் கடைசிதேதி விண்ணப்பம் ஏப்ரல் 26-ம் தேதியாக இருக்கிறது. ஏப்ரல் 26-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு, அவர்கள் கேட்கும் தேர்வு மையங்கள் கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வின் முடிவில் ஐ.இ.எஸ்.-ல் 24 பணியிடங்களும்; ஐ.எஸ்.எஸ்-ல் 29 பணியிடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு 24 ஜூன் 2022-ல் நடக்குமென்றும் சொல்லப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க: upsc.gov.in

* ஐ.பி. வேலைவாய்ப்பு 2022

இண்டலிஜன்ஸ் பியூரோ தரப்பில் 150 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. துணை மத்திய புலனாய்வு அதிகாரி கிரேடு-II/தொழில்நுட்பம் 2022 கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 150 பணியிடங்களில், 56 பணியிடங்கள் கணிணி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கும்; 94 மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 7ம் தேதி கடைசி நாள். விண்ணப்பிதாரர் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க: mha.gov.in or ncs.gov.in

* TNPSC குரூப் 4

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. டிஎன்பிஎஸ்சி-ன் கீழ், `டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மார்ச் 30 முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறியிருந்தார். மொத்தம் 7,382 பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில், 81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படுகின்றன. 7301 பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜூலை 24-ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 200 கேள்விகள், 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் முடிவுகளை வெளியிட டிஎன்பிஸ்சி முடிவு செய்துள்ளது.

விண்ணப்பிக்க: tnpsc.gov.in/English/Notification.aspx

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com